வாலாஜாபேட்டையில் பசும் பொன் ஐயா முத்துராமலிங்க தேவருக்கு அஇஅதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் பூ மலர்களை தூவி வீரவணக்கம்
சுதந்திர போராட்ட வீரரும் தேசமும் ஆன்மீகமும் கொண்ட பற்றாளருமான பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116 ஆவது ஜெயந்தி மற்றும் 61 வது குரு பூஜையை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பேருந்து நிலையம் காந்தி சிலை ராணிப்பேட்டை மாவட்ட தேவர் பேரவை சார்பில் பல்வேறு பூ மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த முத்துராமலிங்க தேவருக்கு அதிமுக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று திருவுருவ படத்திற்கு மலர்களை தூவி தீபாரதனை காண்பித்து வீரவணக்கத்தை செலுத்தி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார் .
இந்த சிறப்பான நிகழ்வில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் அண்ணன் சுமைதாங்கி C.ஏழுமலை வாலாஜா நகர கழகச் செயலாளர் W.G.மோகன், திருப்பாற்கடல் ஊராட்சி மன்ற தலைவர் MGK.தனஞ்செழியன், வாலாஜா நகர அம்மா பேரவை இணை செயலாளர் M.V.அம்பேத் ராஜன், வாலாஜா நகர இளைஞர் அணி WG.முரளி மற்றும் கழக நிர்வாகிகள் திரலாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்
சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்.
கருத்துகள் இல்லை