• சற்று முன்

    வாடிப்பட்டி ஹோட்டலில் நள்ளிரவில் மர்ம நபர் ஆயுதங்களுடன் புகுந்து பணம் திருட்டு.. தொடரும் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம். மர்ம நபர் பணம் திருடும் சிசிடிவி காட்சிகள்

     


    மதுரை திண்டுக்கல் தேசிய நான்கு வழிச்சாலையில் வாடிப்பட்டி அருகே ஆனந்தாஸ் ஹோட்டல் கடந்த 12 ஆண்டு களுக்கும்மேலாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம்நள்ளிரவு திடீரென கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த பணத்தை திருடி சென்றது சிசிடிவி காட்சி மூலம் தெளிவாகியுள்ளது. 



    அதிகாலை 2:15 மணி அளவில் உள்ளே புகுந்த நபர் முகமூடி அணிந்து சாவகாசமாக திருடி சென்றது இந்தப் பகுதியில் உள்ள ஓட்டல் உரிமையாளர்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஹோட்டல் கேசியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வாடிப்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். சமீப காலங்களாக வாடிப்பட்டி பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது கடந்த சில நாட்களுக்கு முன்பாக மேட்டு நீரேத்தான் கோவில் உண்டியலில் இருந்த பணத்தை திருடர்கள் திருடி சென்ற  சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது இதனை கருத்தில் கொண்டு நள்ளிரவு ரோந்து பணியை போலீசார் அதிகப்படுத்த வேண்டும் ,  பயமின்றி பொதுமக்கள் வாழ துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad