திருப்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அருந்ததியர் வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு முற்றுகை
திருப்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அருந்ததியர் வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் குவிந்ததால் பரபரப்பு திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சுற்று வட்டார பகுதிகளான உடையாமுத்தூர் பொம்மிக்குப்பம், குறும்பேரி, ஆதியூர், ஜங்காளபுரம், உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட அருந்ததியர் இந்து வகுப்பைச் சார்ந்த மக்கள் உள்ளனர் இடத்தில் நூறு வருடங்களுக்கு மேலாக அவர்களுடைய மூதாதையர் வாழ்ந்து வந்துள்ளனர்.
மேலும் இதுவரை பகுதி மக்கள் வாழ்ந்து வரும் இடத்திற்கு சொந்தமாக வீட்டுமனை பட்டா இல்லை எனவும் இதன் காரணமாக பகுதி மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து தாங்கள் வாழ்ந்து வரும் இடத்திற்கு சொந்தமாக வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கூறி இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு குவிந்ததால் பரபரப்பு காணப்பட்டது. இந்த நிலையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
மேலும் முக்கிய நபர்கள் 10 பேர் மட்டுமே மாவட்ட ஆட்சியரிடம் சென்று வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர் இதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி மனு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர் : வெங்கட்
கருத்துகள் இல்லை