கோவில்பட்டிமாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி நேரில் ஆய்வு
கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலை ரெயில்வே சுரங்க பாலத்தில் மழை காலத்தில் வெள்ள நீர் தேங்காதவாறு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கையில் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி நேரில் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு பெய்த கனமழையின் காரணமாக இளையரசனேந்தல் சாலையில் உள்ள இரயில்வே சுரங்கப் பாலத்தில் மழை நீர் தேங்கி தனியார் சிக்கிக் கொண்டது அதிலிருந்து பயணிகளை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்
இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் தேங்கியிருந்து மழைநீர் மோட்டார்கள் மூலமாக அகற்றப்பட்டது மேலும், இனிவரும் காலங்களில் கனமழை பெய்யும் பொழுது இரயில்வே சுரங்கப் பாலத்தில் மழை நீர் தேங்காதவண்ணம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
இந்த ஆய்வின் போது, கோவில்பட்டி நகர் மன்றத் தலைவர் கருணாநிதி, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய், கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் கமலா, கோவில்பட்டி வட்டாட்சியர் லெனின், ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை