• சற்று முன்

    பத்திரிகையாளர்கள் மீது ஒடுக்கு முறை! ஒன்றுபட்டு குரல் கொடுப்போம்!



    உரலுக்கு ஒரு பக்கம் இடி! மத்தளத்திற்கு இரண்டு பக்கம் இடி பத்திரிக்கையாளர்களுக்கோ பக்கமெல்லாம் இடி!

    1. ஒன்றிய அரசின் இடி!  2. மாநில அரசின் இடி.!  3. கார்ப்பரேட்டுகள், வகுப்புவாதிகள், அரசியல்வாதிகள், சமூக விரோதிகளின்  என்று பலவாறு இடி!

    + மெகா காட்சி ஊடகங்கள் சிறிய காட்சி ஊடகங்களை மதிப்பதில்லை

    + காட்சி ஊடகங்கள் அச்சு ஊடகங்களை மதிப்பதில்லை.

    + மெகா தினசரி பத்திரிகைகள் பருவ இதழ்களை மதிப்பதில்லை.

    + மெகா பத்திரிகைகள் சிறிய பத்திரிகைகளை மதிப்பதில்லை.

    பத்திரிகை என்பதற்குள் அனைத்தும் அடங்கும் என்றாலும் மேற்கண்ட வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.

    பக்கமெல்லாம் இடி என்பதைத் தாங்கி, மெகா ஊடகங்கள் மற்றும் மெகா பத்திரிக்கைகள் ஆதிக்கத்தையும்  எதிர்கொண்டு செயல்பட வேண்டிய சூழல் பருவ இதழ்களுக்கும், சிறு பத்திரிக்கைகளுக்கும் இருக்கிறது. 

    இந்த சிறு பத்திரிக்கையாளர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் கோரிக்கை குரல் எழுப்பி போராடி வருவதுதான் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு.

    இன்றைய உலகமய அரசியலில் பத்திரிகைகள், ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை ஆளு வோரும், அரசியல் கட்சிகளும் நன்றாகவே உணர்ந்திருக்கின்றன.

    * ஒன்றிய அரசு பத்திரிக்கையாளர் மற்றும் ஊடகவியலாளர்களின் குரல்வளையை நெறிக்கிறது!

    * ஜனநாயகத்தின் நான்காவது தூணை அடித்து நொறுக்கி தரைமட்டமாக்க துடிக்கிறது!

    * ஊடகங்களும் பத்திரிகைகளும் அரசின் செயல்பாடுகளை எதிர்க்கக் கூடாது. விமர்சிக்க கூடாது! மாறாக ஆதரித்து, புகழ்ந்து பிரச்சாரம் செய்ய வேண்டும்!

    * ஊடகங்களுக்கு பத்திரிக்கைகளுக்கு சுயேச்சையான அரசியல் நிலைப்பாடு

    இருக்கக் கூடாது!

    * ஊடகங்கள் பத்திரிகை எழுப்பும் நியாயமான கேள்விகள் விமர்சனங்களுக்கு அரசு பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை!

    * அரசுக்கு எதிராக செய்திகள் வெளியிட்டால் எச்சரிக்கை, தண்டனை என்பது கிடையாது! மாறாக ஊடக நிறுவனம் முடக்கப்படும்!

    * பத்திரிக்கையாளர்கள் ஊடகவியலாளர்கள் ஜனநாயக அடிப்படையில் ஒன்றுபட்டு கோரிக்கை குரல் எழுப்பக்கூடாது..

    * நியூஸ் கிளிக் என்ற இணைய ஊடகத்தின் மீதான கடும் தாக்குதல் ஊடகத் துறைக்கும் பத்திரிக்கை துறைக்கு‌ம் விடும் எச்சரிக்கை.

    * 3.8.2023ல் நிறைவேற்றப்பட்ட பத்திரிகை மற்றும் பருவ இதழ்களின் பதிவு மசோதா 2023 ன் படி, பத்திரிகைகள் வெளியான 48 மணி நேரத்திற்குள் இந்திய அரசின் பத்திரிக்கை தகவல் பணியகத்தின் பிராந்திய அலுவலகத்திற்கு கிடைக்க வேண்டும்.

    * கிடைக்காத பட்சத்தில் ரூபாய் 2000 அபராதம் விதிக்கப்படும். அபராதம் செலுத்த தவறினால் எச்சரிக்கை, கண்டிப்பு போன்ற தகவல் ஏதும் இன்றி பத்திரிகை பதிவு ரத்து செய்யப்படும்.

    * புதிய அடக்குமுறை சட்டம் நிறைவேற்றிய சூட்டோடு செய்தித்தாள்களின் பதிவு விதிகள் 1956-ஐ சுட்டிக்காட்டி, 600க்கும் மேற்பட்ட பத்திரிகைகளின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்தகைய ஒன்றிய அரசின் சர்வாதிகார ஜனநாயக விரோதப் போக்குகளை எதிர்த்து பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் ஒன்றுபட்டு களம் காண்போம்.


               கா.குரு                                                                                    இளசை கணேசன்

    மாநிலப் பொதுச்செயலாளர்                                                    மாநிலத் தலைவர்

    செல் : 91 93810 24328                                                                           செல் : 82204 68816                                                              



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad