மதுரை அயன் பாப்பாக்குடி வெள்ளக்கல் கண்மாயில் தொடர்ச்சியாக வெளியேறும் நுரை; பெங்களூர் ஐஐடி ஆராய்ச்சி குழுவினர் ஆய்வு.
மதுரை மாநகராட்சி அவனியாபுரம் அயன் பாப்பாக்குடி வெள்ளக்கல் கண்மாயிலிருந்து தொடர்ச்சியாக வெளியேறும் தண்ணீரில் நுரை வருவது தொடர்பாக இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸ் பெங்களூர் நிறுவனத்தின் ஆராய்ச்சி குழுவினர் உயர்நிலை ஆராய்ச்சி பேராசிரியர் சாணக்யா பேராசிரியர் வெற்றி நாராயண ராவ் ஆகியோர் அடங்கிய நான்கு பேர் கொண்ட குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் மதுரை மாநகராட்சி தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ், குடிநீர் செயற்பொறியாளர் பாக்கியலட்சுமி, உதவி பொறியாளர் பாலமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை