Header Ads

  • சற்று முன்

    இருசக்கர வாகனத்தில் பின்னால் பயணிப்பவரும் தலைக்கவசம் அணியவேண்டும் என்பதன் அவசியம் குறித்து மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு:



    மதுரை மாநகரில் தலைக்கவசத்தின் அவசியம் குறித்தும் மற்றும் பின்னால்‌ அமர்ந்திருப்பவரும்‌ தலைக்கவசம்‌ அணிவது குறித்தும் மதுரை மாநகர் முழுவதும் போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ‌ 90% பேர்‌ மோட்டார்‌ சைக்கிளில்‌ தலைக்கவசம்‌ அணியாத காரணத்தினால்‌ இறக்கின்றனர்‌.  இதில் அதிகளவில்‌ இளைஞர்களே இறக்கின்றனர், தலைக்கவசம்‌ அணிந்து செல்கிறவர்கள்‌, அதற்குரிய கழுத்து பட்டையை அணிவது கிடையாது.  இதன்‌ விளைவாக அவர்கள்‌ தலைக்கவசம்‌ அணிந்தும்‌ பயன்‌ இல்லாமல்‌ போய்விடுகிறது என தலைக்கவசத்தின் முக்கியத்துவம்  குறித்து எடுத்துரைக்கப்பட்டது. 

    பொதுமக்கள்‌ தங்களது கடமையை உணர்ந்து போக்குவரத்து விதிமுறைகளை பொறுப்புணர்வுடன்‌ பின்பற்றினால்‌ மட்டுமே விபத்துக்களையும்‌, உயிரிழப்புகளையும்‌ தடுக்க முடியும்.   எனவே இரு சக்கர வாகனங்களை இயக்குபவரும் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவரும் தலைக்கவசம்‌ அணிந்தே வாகனத்தில் பயணிக்கவேண்டும் என பொதுமக்களுக்கு மதுரை மாநகர காவல்துறையினர் சார்பாக அறிவுறுத்தப்பட்டது.

    "இரு சக்கர வாகனத்தின்‌ பின்னால்‌ அமர்ந்திருப்பவரும்‌ தலைக்கவசம்‌ அணிவது கட்டாயமாகும்‌, குழந்தைகளும்‌ பயணிக்கும்போது தலைக்கவசம்‌ அணிவது அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யும்‌”..

    வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad