Header Ads

  • சற்று முன்

    மதுரை அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கையில் கரும்புகளுடன் ஆர்ப்பாட்டம்.


    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர்  தேசிய கூட்டுறவு சக்கரை ஆலையை இயக்க கோரி  கடந்த மூன்று ஆண்டுகளாக கரும்பு விவசாயிகள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் ஆலையின் அரவைப் பணிகளை துவங்காமல் அலட்சியம் காட்டும் தமிழக அரசை கண்டித்தும்,  இந்த (2023- 2024) ஆண்டிற்கான அரவை பணிகளை துவங்க வலியுறுத்தியும், ஆலை தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வலியுறுத்தியும்  அலங்காநல்லூரில் கையில் கரும்புகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆயிரகணக்கான கரும்பு விவசாயிகள், மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இந்த ஆலையின் அரவையை துவங்காமல் திமுக அரசு   ஏமாற்றி வருவதாகவும், மத்திய அரசு மக்களின் எண்ணத்திற்கு விரோதமாக பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திமுக அரசு அதனை உணராமல் பொதுதுறை ஆலையின் அரவையை துவங்க தாமதம் செய்கிறது என்றும், பிஜேபி அரசுக்கு ஆதரவாக அதிமுக அரசு செயல் பட்டதால்தான் அதிமுக ஆட்சியை மக்கள் தூக்கி எரிந்தனர். அதனை திமுக அரசு உணர வேண்டும் என்றும், தொடர்ந்து ஆலையின் அரவையை துவங்காமல் தமிழகஅரசு தாமதம் செய்வதால், இந்த ஆலைக்கு வரவேண்டிய  கரும்புகள் அனைத்தும் தனியார் ஆலைக்கு செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும்,

    இந்த ஆலையை துவங்கினால் எத்தனால் மற்றும், கரும்பு சக்கை (பகாஸ்) மூலம் 15 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம். எனவே ஆலையின் அரவையை  தொடங்கினால் லாபகரமாக இயங்க வழிவகை உள்ளது.  இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் அக்கறை காட்டாமல் திமுக அரசும், அமைச்சர்களும் அதன் அதிகாரிகளும் அலட்சியம் காட்டுகின்றனர். தமிழகஅரசு தங்கள் நிலைப்பாட்டை மாற்றிகொண்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஆலையை இயக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் தமிழகஅரசு அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்க மறுத்தால் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்தனர்.

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad