மதுரை விமான நிலையத்தில்ஆரோக்கியம் மற்றும் உடல்நலம் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது
மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் ஆரோக்கியம் மற்றும் உடல்நலம் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் பிட்( fit India) இந்தியா எனும் அமைப்பு சார்பில் ஆரோக்கியம், உடல் நலம் மனநலத்திற்கான சிறப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது .
இதில் மதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டட் விஸ்வநாதன் மற்றும் ஆய்வாளர் நரேந்திர குப்தா மற்றும் 50 வீரர்கள் கலந்து கொண்ட உடல்நலம் குறித்த விழிப்புணர்வு பதாகைகய்களை ஏந்தி சைக்கிளில் விமான நிலையத்தில் இருந்து பெருங்குடி வரை ஊர்வலமாக சென்று மீண்டும் மத்திய தொழில் பாதுகாப்பு படை முகாம் அலுவலகத்திற்கு சென்றனர். மதுரை விமான நிலையம் பகுதியில் பொதுமக்கள் இடையே உடல்நலம் மனவலிமை ஆகியவற்றுடன் ஆரோக்கியமாக இருப்பதற்காக சைக்கிள் பேரணி சென்றது பெரும் வரவேற்பு பெற்றது.
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை