ஆற்காட்டில் செல்போன் திருடனை கைது செய்த போலிஸார் - ஆய்வாளர் பாராட்டு
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி கிரண் சுருதி IPS அவர்களின் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரய்யா மற்றும் ராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு அவர்களின் மேற்பார்வையில் ஆற்காடு நகர காவல் வட்ட ஆய்வாளர் விநாயகமூர்த்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி ஆற்காடு நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆற்காடு ராமலிங்கம் தெருவில் இருசக்கர வாகனத்தில் இருந்த மூன்று செல்போன்களை திருடிச்சென்ற எதிரி விக்னேஸ்வரன் s/o ரமேஷ் குளம்தெரு தோப்புகானா ஆற்காடு என்பவர் மீது ஆற்காடு நகர காவல் நிலைய குற்ற எண்.522/2023 u/s 379 IPC படி வழக்கு பதிவு செய்து எதிரியை கண்டுபிடிக்க உதவி ஆய்வாளர் அமரேசன் அவர்கள் தலைமையிலான தனிப்படை இன்று ஆற்காடு பேருந்து நிலையம் அருகே உள்ள தாஜ் கேன்டீன் அருகில் எதிரியை மடக்கி பிடித்து கைது செய்து அவரிடம் இருந்த விலை உயர்ந்த மூன்று ஆண்ட்ராய்டு செல்போன்களை பறிமுதல் செய்யப்பட்டு எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.
சிறப்பு செய்தியாளர்
ஆர் ஜே.சுரேஷ்குமார்...
கருத்துகள் இல்லை