சவர்மா சாப்பிட்டு குழந்தை உயிரிழந்த விவகாரம் எதிரொலி மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை 70 கிலோ இறைச்சிகள் பறிமுதல் இரண்டு உணவகங்களுக்கு சீல் -ஒரு வாரத்திற்கு தொடர்ந்து சோதனை நடத்தப்படும் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் பேட்டி மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள உணவகங்களில் பயன்படுத்தப்படும் இறைச்சி மற்றும் சவர்மா ப்ஃரைட் ரைஸ் , சிக்கன் உள்ளிட்டவைகள் குறித்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஜெகவீரபாண்டியன் தலைமையில் பல்வேறு குழுக்களாக சென்று திடீர் சோதனை நடத்தினர். மதுரை மாநகரின் பைபாஸ் சாலை , டவுண்ஹால் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள உணவகங்களில் நேரடி ஆய்வு மேற்கொண்டு சோதனை நடத்தியபோது அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக சுவையூட்டும் வண்ணங்கள் மசாலாக்களை சேர்த்த இறைச்சிகள் 70 கிலோ அளவிற்கு பறிமுதல் செய்யப்பட்டன இதேபோன்று தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய கடைகள் மீது அபராதம் விதிக்கப்பட்டு பைகள் பறிமுதல் செய்யப்பட்டன தொடர்ச்சியாக ஒவ்வொரு உணவகங்களுக்கும் முறையான சுகாதாரமான உணவுகளை தயாரித்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுரை வழங்கி சென்றனர் ஆய்வின்போது வண்ணங்கள் சேர்த்த இறைச்சிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை குப்பைத் தொட்டியில் கொட்டி சென்றனர் இது குறித்து பேசிய உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் மதுரையில் ஆய்வின்போது உணவகங்கள் சுகாதாரமற்ற நிலையில் செயல்பட்டதால் இரண்டு உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது, குழந்தைகளுக்கான சாக்லெட், மிட்டாய் குறித்து சோதனை நடந்திவருகிறோம், தொடர்ச்சியாக இந்த சோதனை நடைபெறும் என்றார்.
சவர்மா சாப்பிட்டு குழந்தை உயிரிழந்த விவகாரம் எதிரொலி மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை
70 கிலோ இறைச்சிகள் பறிமுதல் இரண்டு உணவகங்களுக்கு சீல் -ஒரு வாரத்திற்கு தொடர்ந்து சோதனை நடத்தப்படும் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் பேட்டி
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள உணவகங்களில் பயன்படுத்தப்படும் இறைச்சி மற்றும் சவர்மா ப்ஃரைட் ரைஸ் , சிக்கன் உள்ளிட்டவைகள் குறித்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஜெகவீரபாண்டியன் தலைமையில் பல்வேறு குழுக்களாக சென்று திடீர் சோதனை நடத்தினர்.
மதுரை மாநகரின் பைபாஸ் சாலை , டவுண்ஹால் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள உணவகங்களில் நேரடி ஆய்வு மேற்கொண்டு சோதனை நடத்தியபோது அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக சுவையூட்டும் வண்ணங்கள் மசாலாக்களை சேர்த்த இறைச்சிகள் 70 கிலோ அளவிற்கு பறிமுதல் செய்யப்பட்டன
இதேபோன்று தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய கடைகள் மீது அபராதம் விதிக்கப்பட்டு பைகள் பறிமுதல் செய்யப்பட்டன தொடர்ச்சியாக ஒவ்வொரு உணவகங்களுக்கும் முறையான சுகாதாரமான உணவுகளை தயாரித்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுரை வழங்கி சென்றனர் ஆய்வின்போது வண்ணங்கள் சேர்த்த இறைச்சிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை குப்பைத் தொட்டியில் கொட்டி சென்றனர்
இது குறித்து பேசிய உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் மதுரையில் ஆய்வின்போது உணவகங்கள் சுகாதாரமற்ற நிலையில் செயல்பட்டதால் இரண்டு உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது, குழந்தைகளுக்கான சாக்லெட், மிட்டாய் குறித்து சோதனை நடந்திவருகிறோம், தொடர்ச்சியாக இந்த சோதனை நடைபெறும் என்றார்.
கருத்துகள் இல்லை