அதிமுக ஒன்றிய செயலாளருக்கு சொத்தமான செங்கல் சூளையில் விழுந்து கல்லூரி மாணவன் பலி
மதுரை மாவட்டம், ஒத்தக்கடை அருகே உள்ள ஆண்டார்கொட்டாரம், கருப்பப்பிள்ளையேத்தலைச் சேர்ந்தவர் சரண்குமார்(19). இவர், தனியார் பொறியியல் கல்லூரியில், இரண்டாம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியியல் படித்து வந்தார். பகுதி நேரமாக சிலைமான் அடுத்த புளியங்குளத்தில் இருப்பரங்குன்றம் ஒன்றிய முன்னாள் அதிமுக செயலாளர் ராமகிருஷ்ணன் (19) என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார். நேற்று வழக்கம்போல் பணிக்கு வந்த சரண்குமார், சேம்பரில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது செங்கல் மேல் வைக்கப்பட்டிருந்த சிமெண்ட் சிலாப் அவர்தலையில் விழுந்தது. இதில், பலத்த காயமடைந்த சரண்குமார்சம்பவ இடத்திலேயே பலியாளார் இது குறித்து சிலைமான் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை