• சற்று முன்

    கோவில்பட்டியில் ஒரே நேரத்தில் குவிந்த பெண்கள் கூட்டம் - டோக்கன் கூட வழங்க முடியாமல் தாசில்தார் மற்றும் அதிகாரிகள் தவிப்பு

    கோவில்பட்டியில் ஒரே நேரத்தில் குவிந்த பெண்கள் கூட்டம் - டோக்கன் கூட வழங்க முடியாமல் தாசில்தார் மற்றும் அதிகாரிகள் தவிப்பு - கடும் நெருக்கடியால் மயக்கமடைய நிலைக்கு தள்ளப்பட்ட மூதாட்டிகள் - நீண்ட நேரமாக அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதால் பெண்கள் அவதி - தாலுகா அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு....

    மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத ஆயிரக்கணக்கான பெண்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டோக்கன் வழங்கப்பட்டு விண்ணப்பத்தின் நிலை குறித்து பெண்களிடம் கூறப்பட்டு வருகிறது. கூட்டம் அதிகரித்து வருவதால் பெண்கள் முண்டியடித்துக் கொண்டு டோக்கன் வாங்க முயற்சி செய்வதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் போலீஸ் பாதுகாப்புடன் டோக்கன் கூட வழங்க முடியாமல் தாசில்தார் மற்றும் அதிகாரிகள் முயற்சித்த போதும் இருந்த போதிலும் பெண்கள் கூட்டம் அலைமோதுவதால் நெருக்கடி ஏற்பட்டு சில முதியவர்கள் மயக்கம் அடையும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் டோக்கன் வழங்க பெண்களை  ஒரு அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதால் அதிகாரிகளுடன் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad