கோவில்பட்டி அருகே அதிமுக 51 வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு கழக கொடி ஏற்றிய வைத்த முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ
அதிமுகவின் 51 வது ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் முக்குரோடு பகுதியில் அதிமுக நிர்வாகி அழகர்சாமி,தாஸ்ஜய்யன்ராஜ் தலைமையில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அதிமுகவின் கழக கொடி ஏற்றி வைத்து சிறப்புரை சிறப்புரையாற்றி அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார், இதனைத் தொடர்ந்து முடுக்குமீண்டான், மற்றும் பட்டிபட்டறை ஸ்டாப், உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக கழக கொடியை ஏற்றி வைத்தார்.
நிகழ்ச்சியில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், மாவட்ட அவைத்தலைவர் எம்.கே.பெருமாள், மற்றும் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை