• சற்று முன்

    சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சியில் தீவிர டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை



    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் தென்கரை ஊராட்சியில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிர டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஊராட்சியில் உள்ள வார்டுகள் அனைத்திலும் கொசு மருந்து அடிக்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா ஐயப்பன் துணைத் தலைவர் கிருஷ்ணன்ஊராட்சி செயலாளர் முனியராஜ் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் சுகாதார மேற்பார்வையாளர் முத்துராஜ் ஆலோசனையின் பேரில் சுகாதார ஆய்வாளர்கள் பிரபாகரன் சதீஷ்  நடவடிக்கை மேற்கொண்டனர். தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் ஆலயம், அக்ரஹாரம், குருவித்துறை மெயின் ரோடு, ஊத்துக்குளி மெயின் ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நவீன முறையில் கொசு மருந்து அடிக்கப்பட்டது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad