• சற்று முன்

    கொடைரோடு அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு…


    கொடைரோடு அருகே இந்திராநகர் கிராமத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் மின்சாரம் தாக்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்….

    திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே இந்திராநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (38)இவர் பள்ளப்பட்டி அருகே டிராக்டர் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் நிரந்தர பணியாளராக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் இன்று மாலை பணி முடித்து வீட்டிற்கு வந்த அவர் வீட்டின் பின்புறம் குளித்துவிட்டு துணிகளை காய வைக்கும் கம்பியில் ஈர துணிகளை போட்ட போது எதிர்பாராத விதமாக அந்தக் கம்பியின் வழியே மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் உடனடியாக அக்கம்பக்கத்தினர் முதல் உதவி சிகிச்சை அளித்த திண்டுக்கல் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் முத்துக்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியையே உயர்ந்து விட்டதாக தெரிவித்ததை அடுத்து அவரது உடல் உடற்குறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் சம்பவம் குறித்து அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணி முடித்து வீட்டில் குளித்து துணி காய வைக்க சென்றபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தது அப்பகுதிதில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


    திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் : ராஜா 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad