மதுரை பாலமேடு அருகே அதிமுக கவுன்சிலர் வெட்டிப்படு கொலை
மதுரை பாலமேடு அருகே டூவிலரில் சென்ற அதிமுக கவுன்சிலர் வெட்டிப்படுகொலை மர்ம கும்பலுக்கு போலீசார் வலை *வீச்சு பழிக்கு பழியாக நடந்த கொலையால் பரபரப்பு. திண்டுக்கல் மாவட்டம் மாவூத்து பட்டி ஊராட்சியை சேர்ந்தவர் அதிமுக கவுன்சிலர் சந்திரபாண்டியன் இவர் அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் 4வது முறையாக அதிமுக கவுன்சிலராக தொடர்ந்து வெற்றி பெற்று பதவியில் உள்ள நிலையில்
இவர் லிங்கவாடி பகுதியிலுள்ள தனது மகளை பார்ப்பதற்காக மதுரை பாலமேடு அருகே தனது டூவிலரில் சென்றபோது வழிமறித்த கும்பல் அவரை அரிவாளால் சராமரியாக வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பியோடியது. இதனால் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய சந்திரபாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயரிழந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த பாலமேடு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிமுக கவுன்சிலர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை