கலைஞர் நூற்றாண்டு விழா காரியாபட்டியில் மரம் நடும் நிகழ்ச்சி:
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி சார்பாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சித் தலைவர் செந்தில் தலைமை வகித்தார். செயல் அலுவலர் ரவிக்குமார் முன்னிலை வைத்தார். திருச்சுழி ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் பொன் தம்பி மரக்கன்றுகளை நட்டு சிறப்புரையாற்றினார். கவுன்சலர்கள் முனிஸ்வரி, இனியவன் , முகமது முஸ்தபா, சரஸ்வதி பாண்டியன், சங்கரேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை