சிறுபான்மை மக்களை பாதிக்கும் மத்திய அரசின் சிவில் சட்டத்து க்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுகவுக்கு தேசிய லீக் கட்சி நன்றி
இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: மக்களுக்கு அனைத்து விஷயங்களிலும் பாதிக்கக்கூடிய மத்திய அரசால் நிறைவேற்றப்பட இருக்கும் பொது சிவில் சட்டத்தை சிறுபான்மை மக்களுக்கு பாதிக்க கூடியது என்று பொது சிவில் சட்டத்திற்கு அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது .
சிறுபான்மை மக்களின் நலனுக்காக முடிவெடுத்த அதிமுக பொதுச் செயலாளர், எடப்பாடி பழனிச்சாமி அனைத்து முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். தீர்மான நகலை ,அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சர். கே.டி. ராஜேந்திர பாலாஜியிடம், இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர் வழங்கியனார். அருகில் ,நிர்வாகிகள் முகம்மதுகாசிம் இப்ராகிம், மும்மதுஹான், முத்துவிலாசா, மாலிக்பாட்சா, காதர்ஷா ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை