வேடசந்தூர் அருகே இளைஞர் அடித்துக் கொலை
திண்டுக்கல், வேடசந்தூர் அருகே உண்டார்பட்டி செல்லா நகரை சேர்ந்தவர் எட்வின் ஜோஸ்வா(28) இவரின் மாமியாரிடம் மர்ம நபர்கள் 3 பேர் பணம் கேட்டு மிரட்டி அவரது செல்போனை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதனை எட்வின் ஜோஸ்வா தட்டி கேட்டதால் மர்ம நபர்கள் 3 பேர் எட்வின் ஜோஸ்வாவை உண்டார்பட்டி அருகில் உள்ள சந்தன வர்த்தினி ஆற்றுப்பாலம் அருகே கொலைவெறி தாக்குதல் நடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து எட்வின் ஜோஸ்வாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி எட்வின் ஜோஸ்வா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்கள் 3 பேரை தேடி வருகின்றனர்.
செய்தியாளர் : பாலமுரளி
கருத்துகள் இல்லை