ராஜபாளையத்தில் போக்குவரத்து காவல் நிலைய புதிய கட்டிடத்தை காணொளி காட்சி மூலமாக காவல்துறை தலைமை இயக்குனர் திறந்து வைத்தார்
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் புதிதாக கட்டப்பட்ட போக்குவரத்து காவல் அலுவலகத்தை சைலேந்திரபாபு காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார். இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து துறை காவல் நிலையத்தில் புதிய கட்டிடம் 99 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது.
இந்த புதிய கட்டிடத்தை இன்று காணொளி காட்சி மூலம் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் திரு சைலேந்திரபாபு திறந்து வைத்தார் அதனையடுத்து விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் நேரில் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.இ இந்நிகழ்ச்சியில் ராஜபாளையம் காவல்துறை கண்காணிப்பாளர் ப்ரீத்தி மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் லாவண்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை