கோவில்பட்டி அருகே கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம் நடத்திய கிராம மக்கள்...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு ஒன்றியம் அய்யனார் ஊத்து கிராமத்தில் கல்குவாரி அமைக்கப்பட உள்ளதாகவும், தடைசெய்ய வலியுறுத்தி அப்பகுதி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் இடமும் தாலுகா அலுவலகத்திலும் மனு கொடுத்துள்ளனர். இந்நிலையில் கல்குவாரி அமைக்க முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டதாக தெரிகிறது. அதனால் கல்குவாரி அமைக்க தடை விதிக்க வலியுறுத்தி ஊர் பொதுமக்கள் சார்பில் வி.ஏ.ஓ. அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன், வி.ஏ.ஓ. சத்தியராஜ் ஆகியோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சமாதான கூட்டம் நடத்தப்பட்டு, தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
கருத்துகள் இல்லை