• சற்று முன்

    அவனியாபுரம் கல்யாணசுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யானம் நடைபெற்றது.



    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக திருக்கல்யாணம்  நடைபெற்றது . திருக்கல்யாணத்தை முன்னிட்டு காலை 8.30 முதல்.9 மணிக்கு ரிஷபலக்னத்தில் பூர்வாங்க பூஜையுடன் துவங்கி நடைபெற்றது. ராமசுப்பிரமணியம் பட்டர் மீனாட்சியாகவும்

    நாகசுப்ரமணியம் சுந்தரேஸ்வரராகவும் இருந்து ரக்க்ஷ பந்தனம் முடிந்து மாலைமாற்றிக்கொண்டனர். பின்னர் பக்தர்களின் ஹரஹர மகாதேவ கோசத்துடன் சிவவாத்தியங்கள் முழங்க திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கோயில் செயல் அலுவலர் திருமதி சங்கரேஸ்வரி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். திருக்கல்யாண திருப்பணிக்குழு சார்பில் செயலாளர் சிவக்குமார் தலைமையில் 5 ஆயிரம் பேருக்கு திருக்கல்யாண விருந்து வழங்கப்பட்டது.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad