கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் பார்வையாளர்கள் டாக்டர் வாக்குவாதம்
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் பார்வையாளர்கள் இரண்டு பேர் அங்கு பணிபுரிந்த டாக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தரக்குறைவாக பேசியதாக காவல் நிலையத்தில் புகார்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவில் நேற்று இரவு பார்வையாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உறவினர்களை பார்க்க வந்துள்ளனர் அப்போது பணியில் இருந்த டாக்டர் சங்கீதா என்பவர் பார்வையாளர்கள் நேரம் முடிந்து விட்டது என கூறியுள்ளனர். உடனே பார்வையாளர்கள் டாக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தரைக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. சக டாக்டர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் மௌனமாக நின்றனர். இந்நிலையில் வாக்குவாதம் முற்றவே பார்வையாளர்கள் தங்கள் கையில் இருந்த துணிகளை டாக்டர் மீது வீசியதாக கூறப்படுகிறது இது குறித்து டாக்டர் சங்கீதா கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகார் குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை