கோவில்பட்டி அருகே கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோயில் பங்குனி உத்திர தேரோட்டம்
கோவில்பட்டி அருகே கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோயில் பங்குனி உத்திர தேரோட்டம் திரளான பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தமிழகத்தின் தென்பழனி என்று அழைக்கப்படும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குடவரைக் கோயிலான கழுகுமலை கழகாசலமூர்த்தி திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 6:00 மணிக்கு திருவனந்தல் பூஜை கால சந்தி பூஜை மற்றும் கழுகாசலம் மூர்த்தி வள்ளி தெய்வானை சோமாஸ்கந்தர் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்கார மகா தீபாராதனையும் நடைபெற்றது. தினமும் காலை மாலை நேரங்களில் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதி உலா நடந்தது. இன்று அதிகாலையில் 4.30 மணிக்கு கோவில் நடை திறந்து திருவனந்தல் பூஜை விளா பூஜை காலந்தி பூஜை நடத்தப்பட்டு காலை 6 மணிக்கு மேல் சண்டிகேஸ்வரர் சட்டரதத்திலும், விநாயகர் பெருமாள் கோ ரதத்திலும், கழுகாசல மூர்த்தி வள்ளி தெய்வானை வைரதத்திலும் எழுந்தருளுதலை தொடர்ந்து. காலை 8 மணிக்கு திருத்தேரரை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்திஸ்வரன், முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ,பேரூராட்சி மன்ற துணை தலைவர் சுப்பிரமணியன்,தொழிலதிபர் கந்தசாமி உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோசத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.திருத்தேர் தெற்கு ரத வீதியில் இருந்து புறப்பட்டு கீழ பஜார் வழியாக நிலையத்திற்கு வந்தடைந்து தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது.
இதற்கு முன்னதாக கோவில்பட்டி அருகே கரடிகுளம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு தலத்தம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார், கழுகுமலை நகர செயலாளர் முத்துராஜ், கோவில்பட்டி நகர செயலாளர் விஜயபாண்டியன், தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர் அன்புராஜ், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், கோபி, முன்னாள் நகர பொருளாளர் வேல்முருகன், குழந்தைராஜ், ஜெயசிங், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை