சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து பல்வேறு நலத்திட்ட பணிகளை கோவில்பட்டி முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 32 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட பணிகளை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இனாம்மணியாச்சி ஊராட்சிக்கு உட்பட்ட மீனாட்சி நகர் 4 வது தெரு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 10 லட்சம் மதிப்பில் பேவர்பிளாக் சாலை மற்றும் கழிவுநீர் வாறுகால் பணிகளை முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து கோவில்பட்டி அருகே புதுகிராமத்தில் உள்ள சலவை துவைக்கும் தொழிலாளர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 22 லட்சம் மதிப்பில் சலவை துவைக்கும் தொட்டி அமைக்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர செயலாளர் விஜய பாண்டியன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் செல்வகுமார், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர்,ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன்,நகர்மன்ற உறுப்பினர்கள் கவியரசன், செண்பகமூர்த்தி,முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி, வழக்கறிஞர் அணி சங்கர் கணேஷ்,உள்பட அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி,கோபி, முருகன், பழனிகுமார்,பழனி முருகன், உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை