• சற்று முன்

    ராஜபாளையத்தில் உள்ள தனியார் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12.5 டன் ரேஷன் அரிசி மூடைகளை வருவாய் துறையினர் பறிமுதல்


    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தெற்கு அண்ணா நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கிடங்கில் ரேஷன் அரிசி மொத்தமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது தகவலின் பேரில் துணை வட்டாட்சியர் கோதண்டராமன், வட்ட வழங்கல் அலுவலர் ராமநாதன் உள்ளிட்டோர் காவல் துறையினர் பாதுகாப்புடன் குறிப்பிடப்பட்ட பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். அங்கு இருந்த கிடங்கில் ரேஷன் அரிசி மூடைகளாக கட்டி அடுக்கி வைக்கப் பட்டிருந்தது. 50 கிலோ எடையில் 250 மூடைகளில் மொத்தம் 12.5 டன் அரிசி இருந்தது. அரிசி மூடைகளை பறிமுதல் செய்த வருவாய் துறையினர், அரசு நெல் கிடங்கிற்கு எடுத்து சென்றனர். அரிசியை பதுக்கி வைத்திருந்தவர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad