Header Ads

  • சற்று முன்

    கோவை மாநகராட்சிக்கு உட்பட பகுதியில் அடிப்படை வசதியான குடிநீர்யின்றி தவிக்கும் மக்கள்

    கோவை சத்தியமங்கலம் பிரதான சாலையில் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் குடிநீர் குழாயை உடைத்துவிட்டனர். இதனால் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக அப்பகுதியில் வாழும் மக்களுக்கு முறையான குடிநீர் கிடைக்காமல் பொது மக்கள் கடும் அவதிக்குள் ஆளாகின்றனர் . ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாலையின் சந்திப்பில்  வாகனத்தில் குடிநீர் மாநகராட்சி குடிநீர் விநியோகம் செய்கிறது. அதிலும் ஒரு வீட்டிற்கு  ஐந்து குடம் என்கிற விகிதாசாரத்தில்  வழங்கப்படுகிறது. அப்பகுதியில் வசிக்கும் முதியோர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். 

    இதே போன்று  கோவை மணியங்கார பாளையத்தில் பொது மக்கள் கடந்த சில நாட்களாகவே குடிநீர் விநியோகம்  இல்லாமல் கடும் சிரமத்திற்கு தள்ளப்பட்டனர். இன்று காலை சாலையின் சந்திப்பில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சில மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    மேலும் சத்தியமங்கலம்  சாலையில் உடைந்த குடிநீர் குழாயை உடனே சரிசெய்து அப்பகுதி மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டுமென பொது மக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

    கோவை மாவட்ட நிருபர் : அக்னிபுத்திரன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad