Header Ads

  • சற்று முன்

    காவல்துறையில் பெண்களை நியமித்து 50 ஆண்டுகள் நிறைவு சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிள் பேரணி

    காவல்துறையில் பெண்களை நியமித்து 50 ஆண்டுகள் நிறைவு  - 110 பெண் காவலர்கள்,  எங்களாலும் சாதிக்க முடியும் என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிள் பேரணி.(கடந்த 17ஆம் தேதி சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் துவக்கி கிளம்பிய பேரணி 27ஆம் தேதி கன்னியாகுமரி சென்றடைய உள்ளது) மதுரை மாவட்டம் திருமங்கலம் வழியாக கன்னியாகுமரிக்கு வருகிற 27ஆம் தேதி சைக்கிள் பேரணியை நிறைவு செய்ய உள்ள 110 பெண் காவலர்கள் , காவல்துறையில் பெண்களை நியமித்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி , அதனை கொண்டாடும் விதமாக, மிதிவண்டியில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை 10 நாட்கள்,  நாள் ஒன்றுக்கு 80 கிலோ மீட்டர் வீதம் மிதிவண்டியை ஓட்டி எங்களாலும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் , பெண் காவலர்கள் பேரணியாக சென்றனர்.இப்பேரணியில்  பங்கு கொண்டவர்களை,  மதுரை காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் பாராட்டி, கை அசைத்து திருமங்கலத்தில் இருந்து வழி அனுப்பி வைத்தார் . இந்த விழிப்புணர்வு பேரணியில் உளுந்தூர்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் , 5 சார்பு ஆய்வாளர்கள், 20 தலைமை காவலர்கள் உட்பட பலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad