• சற்று முன்

    சென்னை ராயபுரம் தபால் நிலையம் அருகே காங்கிரசார் ராஜீவ் நட்பகம் சார்பில் நூதன போராட்டம் நடத்தினர்.

    கர்நாடக மாநிலத்தில் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி பாரத பிரதமரை மோடி என்ற சர்ச்சைக்குரிய வார்த்தையை குறிப்பிட்டதாக சூரத் நீதி மன்றத்தில் ராகுல் மீது அவமதிப்பு வழக்கு தொடரபட்டது. அந்த வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என சூரத் நீதிமறம் 2ஆண்டுகள் சிறை தண்டனை அறிவித்தது. சூரத் நீதி மன்ற தீர்பினை வாபஸ் பெற கோரி சென்னை ராயபுரம் தபால் நிலையம் அருகே காங்கிரசார் ராஜீவ் நட்பகம் சார்பில் ராகுல் மீது வழங்கிய சூரத் நீதிமன்ற தீர்ப்பினை வாபஸ் பெற நூதன போராட்டம் நடத்தினர். 

    தமிழ் காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பொன்னுரங்கம் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில், மாநில பொது செயலாளர் ராமலிங்க ஜோதி, வட சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர், ஷாஜகான், மனித உரிமை துறை மாநில செயலாளர் வேலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில், வட சென்னை மாவட்ட எஸ்.சி துறை மேனாள் தலைவர் குமரன், பொதுக்குழு உறுப்பினர் பார்த்தசாரதி, திருவொற்றியூர் நகர காங்கிரஸ் கமிட்டியின் மேனாள் தலைவர் கலைமணி,காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜன் காந்தி, காஜா மொகிதின், இம்ரான்,நாராயணன், மற்றும் பலர் கண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad