Header Ads

  • சற்று முன்

    சோழவந்தான் பகுதி பள்ளிவாசலில் புனித ரமலான் நோன்பு தராஃபி தொழுகையில் முஸ்லிம்கள்


    மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள பள்ளிவாசலில் புனித ரமலான் நோன்பு தராபிக் தொழுகையில் ஏராளமான இஸ்லாமிய பெருமக்கள்  கலந்து கொண்டனர் இங்குள்ள பள்ளிவாசலில் சுமார் 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு தொடங்குவதை முன்னிட்டு தொழுகையில் ஈடுபட்டனர்.உலக முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான்மாதம் விளங்குகிறது இஸ்லாத்தின் புனித நூலான திருக்குர்ஆனின் இறைமறையின் வழிகாட்டுதலின் முதலில் முஸ்லிம்கள் மக்களுக்கு ஐம்பெரும் கடமைகளாகும் இதில் ஒன்று ரம்ஜான் மாதம் 30 நாட்கள் தொடர்ந்து ரமலான் நோன்பு அதாவது அதிகாலை 4 மணிக்கு உணவு சுவைத்துவிட்டு அன்று முழுவதும் உமிழ் நீர் கூட வாயிலில் விழுங்காமல் உணவை மறந்து ஐந்நேரம் தொழுகையில் முழு கவனம் செலுத்தி மாலை 6.30 மணி அளவில் நோன்பு திறக்க நிய்யத்து செய்துதொழுது அல்லாஹ்வின் இறைஅருள் பெற பேரிச்சம்பழம் நோன்பு கஞ்சி அருந்திட முஸ்லிம்கள் நோன்பை கடைபிடிப்பது இறைவன் அல்லாவின் அருளை பெற்றவன் ஆவான் என்பது ரமலான் நோன்பின் மகத்துவமாகும் நோன்பு நோக்கும் 30 நாட்களும் இரவு தராஃபி  சிறப்பு தொழுகையால் அல்லாஹ்வின் அனைத்து நன்மைகள் வரவாகும் இதனால் முஸ்லிம்கள் இறைவனின் 5 கடமைகளை நிறைவு கூறும் வகையில் இந்த புனிதமான ரமலான்நோன்பு அல்லாஹ்வின் இறையருளை முஸ்லிம்கள் உணர்வதாக தொழுகையில் சகோதரத்துவம் அன்பை பகிர்தல்  நம்பிக்கைபுனித ரமலான் நோன்பின் மகத்துவமாக ரமலான்மாதம் திகழ்கிறது எனலாம் ரமலான்மாதத்தில் மரணிக்கும் முஸ்லிம்களுக்கு இறைவனடியாக சொர்க்கம் கிடைக்கும் என்பது இஸ்லாத்தின் நம்பிக்கை முஸ்லிம்கள் கருதுகின்றனர்..

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad