மதுரை நாகமலை புதுக்கோட்டையில் "மாபெரும் தமிழ் கனவு"
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் "மாபெரும் தமிழ் கனவு" தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக மதுரை மாவட்ட ஆட்சியர் அணிஷ் சேகர், சிறுபான்மையர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெ.குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து சிறுபான்மையர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மாணவ மாணவிகளிடம் தமிழ் மரபு குறித்தும் தமிழின் தலைவர்கள் குறித்து வினாடி வினா நடத்தி அதில் சரியாக சொன்ன மாணவ மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கம் பரிசு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசு கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை