பொதுமக்களுக்கு சேவை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார் காட்பாடி சார் பதிவாளர் பிரகாஷ்
வேலூர் மாவட்டம், காட்பாடியில் சார்பாக பணிபுரிபவர் பிரகாஷ். இவர் பொறுப்பேற்று கடந்த 2 மாதங்கள்தான் ஆகிறது. இவர் பொறுப்பேற்றதிலிருந்து காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்துக்கு பல்வேறு வகையான பணிகளுக்காக வரும் பொதுமக்களை இன்முகத்துடன் அழைத்து அவர்களுக்கு வேண்டிய பணிகளை உடனுக்குடன் முடித்துக் கொடுத்து அனுப்பி வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அத்துடன் வயது முதிர்ந்த மூத்த குடிமக்கள் யாராவது வருகை தந்தால் அவர்களை இன்முகத்துடன் வரவேற்று அமர வைத்து அவர்களுக்கு எந்த பணியை முடித்து தர வேண்டுமோ அதை உடனடியாக முடித்துக் கொடுத்து விரைந்து அவர்களை அனுப்பி வைக்கிறார் இந்த நல்ல மனம் கொண்ட பிரகாஷ் என்ற சார்பதிவாளர். இவர் காட்பாடியில் பணிபுரிகிறார் என்பது அனைவரது கவனத்தையும் இன்று ஈர்க்கும்படி அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரி மாதம் நடந்த குடியரசு தின விழாவின் போது காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மட்டுமல்லாது அங்கிருந்த பொதுமக்களுக்கும் காலை சிற்றுண்டி மற்றும் இனிப்புகள் வழங்கி அவர்களை நகை உரச் செய்தவர் தான் இந்த ஈர நெஞ்சம் படைத்த சார்பதிவாளர் பிரகாஷ் என்று சொன்னால் அது மிகையாகாது. இவரிடம் பழகிப் பார்க்காமல் இவர் யார் என்று தெரியாமல் இவர் மனது என்ன என்று புரியாமல் பலர் அவதூறுகளை வாயில் வந்தது போல் பரப்பி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பொய் என்பது வேகமாக பரவும். ஆனால் உண்மை என்பது நிதானமாகத்தான் வெளிவரும். ஆனால் உண்மை என்றும் சாகாது. என்றும் வாய்மையே வெல்லும்.
எதற்கெடுத்தாலும் பணம் ,பணம் என்று வாயைப் பிளக்கும் சார்பதிவாளர் அலுவலகத்தில், தன்னுடன் பணிபுரியும் சக ஊழியர்களையும் அழைத்து யாரிடமும் பணம் பெறக்கூடாது என்ற ஒரு அன்பு கட்டளை வேறு இட்டுள்ளார் இந்த பிரகாஷ் என்ற சார்பதிவாளர் (பொறுப்பு) என்று சொன்னால் அதுவும் மிகையாகாது. இதனால் காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்துக்கு வந்து செல்லும் பொதுமக்கள் மகிழ்வுடனும், மனநிறைவுடனும், மகிழ்ச்சியுடனும் திரும்பிச் செல்வதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது .
இட்டுகட்டி செய்தி எழுத வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் இவரை போன்ற தயாள குணமும், உள்ளமும் உள்ள மனித
ரை காண்பது அரிது. இவர் சமுதாயம் வளர்ச்சி பெற உழைப்பது அனைத்து தரப்பினரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தின் பிரதிபலிப்பு என்று சொல்லலாம். பொதுமக்கள் இது போன்று ஒவ்வொரு சார்பதிவாளரும் நடந்து கொண்டால் நாட்டில் லஞ்ச லாவண்யம் குறைந்து காந்தி கண்ட சுதந்திரத்திற்கு ஒரு தீர்வு கிடைத்தது என்ற சந்தோஷம் நமக்கெல்லாம் கிடைக்கும் என்கின்றனர். இது நிதர்சன உண்மையாகும். இதுவரை வந்த சார்பதிவாளர்களிலேயே பிரகாஷ் சற்று வித்தியாசமானவர் என்று சொன்னால் அதுவும் மிகையாகாது. புகழ்ச்சியை விரும்பாதவர் தன் பணியை சிறப்புடன் செய்து வருகின்றார். ஆயிரம் கை
கள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை என்பர். இவரது பேரையும், புகழையும் குலைக்க யாராலும் முடியாது. இவரது பணி சிறக்க வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் காட்பாடி தாலுக்கா பொதுமக்கள்.
வேலூர் மாவட்ட நிருபர் : S . சுதாகர்
கருத்துகள் இல்லை