தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பாக நடைபெற்ற.கலை சங்கமம் நிகழ்ச்சியில் நடிகர் வாகை சந்திரசேகர் கலந்து கொண்டு சான்றிதழ் வழங்கினார்
சோழவந்தானில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பாக நடைபெற்ற.கலை சங்கமம் நிகழ்ச்சியில் நடிகர் வாகை சந்திரசேகர் கலந்து கொண்டு சான்றிதழ் வழங்கினார்
மதுரை மாவட்டம் சோழவந்தானில் பொங்கல் விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பாக கலை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. வணிகவரி பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அணி சேகர், சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் ஆலோசனையின் பேரில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற தலைவர் வாகை சந்திரசேகர் தலைமை வகித்தார். எம் ஆர் எம் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். சோழவந்தான் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் வரவேற்றார். இதில் கரகாட்டம் ஒயிலாட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டம் நையாண்டி மேளம் தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது கலைஞர்களுக்கு வாகை சந்திரசேகர் சால்வை அணிவித்து சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர், வாடிப்பட்டி தாசில்தார் வீரபத்திரன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் லதா கண்ணன், சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் பேரூராட்சி பணியாளர்கள் திமுக நிர்வாகிகள் மற்றும் சோழவந்தான் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த கலை பண்பாட்டு ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை