Header Ads

  • சற்று முன்

    ராஜபாளையத்தில் நடந்த ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில்அடிப்படை வசதிகள் செய்து தர கவுன்சிலர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


    ராஜபாளையத்தில் நடந்த ஊராட்சி ஒன்றிய கூட்டத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரவும், இடிந்த நிலையில் உள்ள நியாய விலைக் கடை கட்டடத்தை புதுப்பிக்கவும் கவுன்சிலர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழு கூட்டம் தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மொத்தம் உள்ள 24 கவுன்சிலர்களில் 14 பேர் கலந்து கொண்டனர். தொடக்கத்தில் பேசிய 24 வது வார்டு கவுன்சிலர் ராஜ்குமார், கொருக்கான் பட்டியில் சேதம் அடைந்த நியாய விலை கடை கட்டடத்தை புதுப்பிக்கவும், தென்கரை, ஊஞ்சாம்பட்டி, நயினாபுரம் கிராமங்களில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை புதுப்பிக்கவும், தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவும் கோரிக்கை விடுத்தார்.

    அடுத்ததாக பேசிய 15 வது வார்டு கவுன்சிலர் பகத்சிங், முத்துசாமிபுரத்தில் இருந்து முகவூர் காமராஜர் சிலை வரை ஏற்பட்டுள்ள தாமிரபரணி கூட்டுகுடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யவும், நெசவாளர் பகுதியில் பாதியில் நின்று போன கழிவுநீர் வடிகால் பணிகளை மீண்டும் தொடங்கவும், காமராஜர் நகரில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சீரமைக்கவும் கோரிக்கை விடுத்தார்.

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad