• சற்று முன்

    கிருஷ்ணகிரியில் விவசாயிகளின் பட்டா நிலங்களை பறிக்க முயலும் ஓலா நிறுவனம்!



    ஓலா நிறுவன அதிகாரிகளுக்கு துணை போகும் அதிகாரிகள்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! - எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல் இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள சிப்காட் வளாகத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் செயல்பட்டு வரும் நிலையில், போச்சம்பள்ளியை அடுத்த பாராண்டப்பள்ளி பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பட்டா நிலங்களை கேட்டு, நில புரோக்கர்கள் மூலம் ஓலா நிறுவனம் அழுத்தம் தருவதாக அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

    ஏற்கனவே, சிப்காட் அமைப்பதற்காக தங்களின் 1200 ஏக்கர் விவசாய நிலங்களை அரசுக்கு அளித்துவிட்டு எஞ்சிய இடங்களில் விவசாயம் செய்து வாழ்வாதாரத்தை நடத்திவரும் தங்களிடமிருந்து நிலத்தை வலுக்கட்டாயமாக வாங்க ஓலா நிறுவனம் புரோக்கர்களை கொண்டு அழுத்தம் தருவதாகவும், அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஓலா நிறுவனத்துக்கு ஆதரவாக நில அளவீடு பணிகள் ஆகியவற்றை தங்களின் ஒப்புதல் இன்றி தன்னிச்சையாக மேற்கொள்வதாகவும் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். அரசின் சிப்காட் நிலங்களை தாண்டி, தனி நபர்களுக்கு சொந்தமான பட்டா நிலங்களை ஓலா நிறுவனம் வாங்க எந்த அதிகாரமும் இல்லாத நிலையில், இத்தகைய நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். ஓலா நிறுவனத்தின் ஏகபோக தேவைக்காக விவசாய நிலங்களை பறிக்க முயலும் இந்த நடவடிக்கையை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. இந்த விசயத்தில் தன்னிச்சையாக செயல்பட்டு விவசாயிகளின் வீடுகளை காலி செய்ய வலியுறுத்திய வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஓலா நிறுவனத்தின் துணைத் மேலாளர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad