• சற்று முன்

    கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமான தினசரி மார்க்கெட்டில் வாடகை பாக்கி கொடுக்காத சில கடைகளுக்கு சீல் வைத்ததால்எதிர்ப்பு


    கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமான தினசரி மார்க்கெட்டில் வாடகை பாக்கி கொடுக்காத சில கடைகளுக்கு சீல் வைத்ததால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து  வியாபாரிகள்  மார்க்கெட் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமாக  மார்க்கெட் பகுதில்  முத்துராமலிங்கத் தேவர் தினசரி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது இங்கு 200-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது இக்கடைகளில் ஒரு சில கடைகள் வாடகை பாக்கி இருந்து வந்த நிலையில் தொடர்ந்து பலமுறை வாடகை கட்ட வலியுறுத்தியும் கட்டாதால் இன்று அங்கு சென்ற நகராட்சி அதிகாரிகள் கடைக்கு சீல்  வைத்தனர் இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள்  மார்க்கெட் முன்பு உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் சீல் வைக்கப்பட்ட கடைகள் திறக்கப்படும் என கூறியதை தொடர்ந்து அனைவரும் கலந்து சென்றனர்.


    வியாபாரிகள் தங்களுக்கு இது குறித்து முறையாக நோட்டீஸ் வழங்கவில்லை என குற்றம் சாட்டினர். சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad