மதுரை மாட்டுத்தாவணி மாடுகளுக்கு விஷம் வைத்து கொல்லப்பட்டதாக விலங்கு நல ஆர்வலர் குற்றச்சாட்டு மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் பரபரப்பு
அடுத்தடுத்து மாடுகள் திடீரென இறப்பு விஷம் வைத்து கொல்லப்பட்டதாக விலங்கு நல ஆர்வலர் குற்றச்சாட்டு மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் பரபரப்பு
மதுரை மாட்டுத்தாவணி மொத்த காய்கறி வணிகம் நடைபெற்று வருகிறது இதில் தினசரி மீதமாகும் கழிவு காய்கறிகளை அங்கு மேச்சலில் இருக்கும் மாடுகள் தின்று வருவதாகவும் சில சமயம் விற்பனைக்கு வைக்கப்பட்ட காய்கறிகளையும் தின்னும் எனவும் இதை வியாபாரிகள் விரட்டுவதாகவும் தெரியவந்துள்ளது இந்த நிலையில் நேற்று பசு மற்றும் கன்று என மொத்தம் ஆறு மாடுகள் அடுத்தடுத்து திடீரென உயிரிழந்தது இது தொடர்பாக மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்னைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் இறந்த மாடுகளை எடுத்துச் சென்றனர் பின்னர் அதன் உரிமையாளர்கள் அடக்கம் செய்ததாக கூறி பெற்று சென்றனர் இதுகுறித்து மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மொத்த விற்பனையாளர்கள் சங்க தலைவர் சின்னமாயன் கூறுகையில் பசுக்கள் அனைத்தும் பாலிதீன் பை உண்டதாலேயே உடல் உபாதை ஏற்பட்டு இறந்திருக்கலாம் என தெரிவித்தார்கள் மேலும் மாநகராட்சிக்கு நாங்கள் தான் தகவல் கொடுத்தோம் எனவும் தடை செய்யப்பட்ட பாலிதீன் பையை மாட்டின் உயிரை காப்பாத்தி இருக்கலாம் எனவும் தெரிவித்தார் இதற்கிடையே மாடு இறப்பின் மர்மம் இருப்பதாக விலங்கு நல ஆர்வலர் சாய் மயூர் புகார் தெரிவித்துள்ளார் மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் அடுத்தடுத்து ஆறு மாடுகள் பாலிதீன் பை சாப்பிட்டு இறந்ததாக கூறுகின்றனர் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இறக்க வாய்ப்பு இல்லை எனவும் இது விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தி இறந்த மாடுகளை பிரேத பரிசோதனை செய்து அதன் உண்மை தன்மையை அறிய வேண்டும் என பசுமாட்டு இறப்புக்கு காரணமான நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்கு நல ஆர்வலர் சாய் மயூர் கோரிக்கை விடுத்துள்ளார் ஒரே நேரத்தில் அடுத்தடுத்து ஆறு மாடுகள் இறந்தது மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை