• சற்று முன்

    மதுரை அரசு பள்ளியில் உலக ஈர நில தினம் நிகழ்வு நடைபெற்றது :

    மதுரை  எல் கே பி நகர் நடுநிலைப்பள்ளியில் உலக ஈர நில தினம் நிகழ்வு தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில்  நடைபெற்றது. 


    ஆசிரியர் ராஜ வடிவேல் முன்னிலை வகித்தார். ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார். சமூக ஆர்வலர் அசோக்குமார் ஈர நிலங்களின் பங்கு, ஈர நிலங்களை காப்பாற்றுவதன் அவசியம், பாதுகாக்கும்  முறைகள், சதுப்பு நிலங்களை இழப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினார். மாணவ மாணவிகளிடம் நெகிழிப் பைகளுக்கு பதிலாக துணிப்பை பயன்படுத்துவதன் அவசியம் எடுத்துக் கூறப்பட்டது. மாணவ மாணவிகளுக்கு துணிப் பைகள் வழங்கப்பட்டன. சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்து கோஷங்கள் எழுப்பி மாணவ மாணவிகள் ஊர்வலமாக சென்றனர். சுற்றுச்சூழல் சார்பாக வினாடி வினா நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன ஆசிரியை அனுசியா தொகுத்து வழங்கினார். ஆசிரியை மனோன்மணி நன்றி கூறினார். விழாவில் பெற்றோர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்..

    செய்தியாளர்  வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad