Header Ads

  • சற்று முன்

    சதுரகிரிமலையில் நாளை, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி... மழை பெய்தால், அனுமதி ரத்து என்று அறிவிப்பு.....



    விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை, சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த மலைக் கோவிலுக்கு ஒவ்வொரு பிரதோஷம் நாளிலிருந்து தொடர்ச்சியாக 4 நாட்கள் என, ஒரு மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக அனுமதி வழங்கப்படும். நாளை 3ம் தேதி (வெள்ளி கிழமை), தை மாத வளர்பிறை பிதோஷத்தை முன்னிட்டு சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக, பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. நாளை 3ம் தேதி முதல், வரும் 6ம் தேதி (திங்கள் கிழமை) வரையிலான 4 நாட்களும் மலைக் கோவிலுக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு, 4 நாட்கள் அனுமதி வழங்கப்படுகிறது. 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மலைக் கோவிலுக்கு செல்வதை தவிர்க்குமாறு வலியுறுத்தப்படுகிறது. மேலும் மலைப் பகுதியில் மழை பெய்தால், பக்தர்கள் கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி கிடையாது என்று கூறப்பட்டுள்ளது. 

    விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலையில் இருந்து பரவலாக சாரல்மழை பெய்து வருகிறது. நாளையும் தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் நாளை காலை நேரத்தில் மலைப் பகுதிகளில் மழை பெய்தால், சதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. நாளை சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்று, பக்தர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad