Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி நகராட்சியில் துப்புரவு தொழிலாளர்களை சட்டவிரோதமாக பணியில் அமர்த்திய நகராட்சி நிர்வாகம் மீது கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார்

    கோவில்பட்டி நகராட்சியில் துப்புரவு தொழிலாளர்களை சட்டவிரோதமாக பணியில் அமர்த்தி பாதுகாப்பு உபகரணங்கள், ஏதும் வழங்காமல் கழிவு நீர் ஓடையை சுத்தம் செய்ய வைத்த அவலம் நகராட்சி நிர்வாகம்  மீது கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார்.



    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக 200க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் நிர்ணயம் செய்யும் முறையான ஊதியம் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில் கோவில்பட்டி ஸ்டாலின் காலனியைச் சேர்ந்த ஆறுமுகம், முருகன், முருகேசன், கருப்பசாமி ஆகிய துப்புரவு தொழிலாளர்களை சட்டவிரோதமாக பணியில் அமர்த்தி அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், கருவிகள் ஏதும் வழங்காமல் சாக்கடை அடைப்புகளை சரி செய்வது, கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்வது, கழிவு நீர் ஓடையில் இறங்கி பாதுகாப்பற்ற முறையில் வேலை செய்ய வைத்துள்ளனர்.


    நகராட்சி அதிகாரிகள்.முக கவசம், கையுறை, காலனி,தலைக்கவசம் என தலை முதல் கால் வரையில் முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாதது குறித்து முறையீடு செய்த போதும் நகராட்சி அதிகாரிகள் அலட்சியப்போக்கோடு தொடர்ந்து செயல்பட்டு வந்துள்ளனர். இதையடுத்து.ஜெய் பீம் தூய்மை தொழிலாளர் நலச்சங்கத்தின் தலைவர் செண்பகராஜ் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் கோவில்பட்டி நகராட்சி கமிஷனர் மற்றும் சுகாதார அலுவலர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்துள்ளார். புகார் மனு தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் நகராட்சி கமிஷனர் மற்றும் சுகாதார அலுவலரை நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவித்துள்ளனர்.

    துப்புரவு பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் குறைந்த வயதிலேயே நுரையீரல் பாதிப்பு, காசநோய், ஆஸ்துமா, புற்றுநோய் போன்றவர்களுக்கு இலக்காகின்றனர். மத்திய அரசு சார்பில் 2014 ஆம் ஆண்டு தூய்மை பாரத திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது, இந்த திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுக்கும் இடத்தில் உள்ளவர்கள் துப்புரவு தொழிலாளர்கள். ஆனால் அவர்களின் உடல் நலம், பணி பாதுகாப்பு,  பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் அரசு நிர்வாகங்களும் அதிகாரிகளும் அலட்சியத்தோடு செயல்படுவது வேதனைக்குரியது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad