• சற்று முன்

    கோவில்பட்டி அருகே கயத்தாறு அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியரைமர்மகும்பல் ஓட ஓட விரட்டி சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடி தலை மறைவாகினர்.


     


    கோவில்பட்டி அருகே திருமலாபுரத்தில் நில பிரச்சனை காரணமாக அரசு பள்ளி ஆசிரியரை மர்மகும்பல் ஓட ஓட விரட்டி சரமாரியாக அரிவாளால்  வெட்டி விட்டு தப்பியோடி தலை மறைவாகினர்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் சுப்புராஜ் இவருக்கு சொந்தமான விவசாய நிலம் திருமலாபுரம் கிராமத்தில் உள்ளது.  இன்று மாலை ஆசிரியர் சுப்புராஜ் தனது தோட்டத்தில் இருந்த போது அங்கு வந்த திருமலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி அவரது கணவரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான கண்ணன் இவர்கள் மகன் செல்வகுமார் உள்ளிட்ட சிலர் நிலத்துக்கு கம்பி வேலி அமைத்தது தொடர்பாக பேசிக் கொண்டிருந்த போது திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் சிறிது நேரத்தில் அங்கு வந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஆசிரியர் சுப்புராஜை தலை கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டி வீழ்த்தி விட்டு தப்பியோடி தலைமுறைகினர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆசிரியர் சுப்புராஜை மீட்டு திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இச்சம்பவம் தொடர்பாக கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad