சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே தீ விபத்து
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே உடைந்த பைபர் படகுகள், கழிவு பொருட்கள் ஏராளமாக குவிந்து கிடந்தது. எதிர்பாராத விதமாக திடீரென தீ பிடித்து எரிந்தது. பொது மக்கள் தீயணைப்புத் துறையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததிருவெற்றியூர்,மணலி தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்தில் தீயை கட்டுக் கொண்டு வந்தனர். இதனால் அந்த பகுதியே புகைமண்டலமாக காணப்பட்டது. மேலும் போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை