• சற்று முன்

    திருவாரூர், பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த 2 பலே கொள்ளையர்கள், சிவகாசியில் கைது


    3 ஆண்டுகளாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 2  பலே கொள்ளையர்களை, சிவகாசி போலீசார் கைது செய்தனர். கொள்ளையர்களிடம் இருந்து 79 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டது. 

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் பூட்டிக்கிடக்கும் வீடுகளில், தொடர் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்தன. கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் சிவகாசி - திருவில்லிபுத்தூர் சாலையில் உள்ள இரட்டை பாலம் சாலையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி போலீசார் விசாரித்தனர். போலீசார் விசாரணையில் பிடிபட்ட இரண்டு பேரும் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனையடுத்து தனிப்படை போலீசார், வாகன சோதனையில் சிக்கிய இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். போலீசாரின் தீவிர விசாரணையில் பிடிபட்ட இரண்டு பேரும்

    திருவாரூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த ஹரிபிரசாத் என்று தெரிய வந்தது. இவர்கள் இருவரும்

    கடந்த 3 ஆண்டுகளில், சிவகாசி பகுதியில்  5 வீடுகளிலும், தேவகோட்டையில் ஒரு வீட்டிலும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. இவர்கள் இருவரிடமிருந்து 79 பவுன் தங்கநகைகள் மீட்கப்பட்டது. மேலும் இவர்களிடமிருந்து கொள்ளை சம்பவத்தில் பயன்படுத்திய ஆயுதங்கள், கையுறைகள் உள்ளிட்ட பொருட்களையும் போலீசார் கைப்பற்றினர். பிடிபட்ட இருவரிடமும், சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன், தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad