• சற்று முன்

    கோவில்பட்டி அருகே மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு கிராம மக்கள் தர்ணா போராட்டம் ...

    கோவில்பட்டி அருகே மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு - கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலக வாயில் முன்பு அமர்ந்து கிராம மக்கள் தர்ணா போராட்டம் ...


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம் விளாத்திகுளம் தாலுகாக்களில் கடந்த காலங்களில் வைப்பாற்றில்  மணல் குவாரிகள் அமைக்கப்பட்டு விதிமுறைகளை மீறி அதிக அளவில் மணல் அள்ளப்பட்டது. இதனால் விளாத்திகுளம் எட்டயபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து கடும் வறட்சி ஏற்பட்டது.  விவசாயக் கிணறுகள் குடிதண்ணீர் கிணறுகள் முற்றிலும் வறண்டதால் குடிதண்ணீர் ஒரு குடம் 12 ரூபாய்க்கு வாங்கும் நிலைமை இருந்து வருகிறது.இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் சராசரி மழை அளவை விட மிக குறைவான அளவில் மழை பெய்துள்ளது இதனால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் வறட்சி நிலவுகிறது நீர் நிலைகள் அனைத்தும் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகின்றன. கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே பல கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடு தலையெடுத்துள்ளது. இப்படி பல்வேறு நெருக்கடிகளால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் சூழலில் விளாத்திகுளம்  ஒன்றியத்தில் அம்மன் கோவில்பட்டி சித்தவநாயக்கன்பட்டி கிராமங்களில் மணல் குவாரி அமைக்க நீர்வளத்துறை அதிகாரிகள் உடந்தையுடன் தனிநபர்கள் சிலர் தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த காலங்களில் மணல் குவாரி அமைக்கப்பட்டதன் விளைவுகளில் இருந்து இன்னமும் மக்கள் மீளாத நிலையில்   தமிழக அரசு வைப்பாற்று படுகையில் அமைந்துள்ள

    அம்மன் கோவில்பட்டி, சித்தவ நாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று மணல் குவாரி அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என தெரிவித்து 

    கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில்  கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் தலைமையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில்  கண்டன முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad