• சற்று முன்

    அருப்புக்கோட்டை அருகே, பாம்பு கடித்து மூதாட்டி பரிதாப உயிரிழப்பு


    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள முத்துராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் துணைமாலை (59). இவர் வீட்டின் அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றார். அப்போது துணைமாலையை பாம்பு கடித்தது. வீட்டிற்கு வந்த அவர், பாம்பு கடித்தது குறித்து உறவினர்களிடம் கூறினார். உடனடியாக அவரை விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட துணைமாலை, சிகிச்சை பலனலிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அருப்புக்கோட்டை நகர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad