• சற்று முன்

    கடல் வழியாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சுமார் (950 கிலோ) ஒரு டன் அளவிலான கஞ்சா வை கடத்த முயன்ற கடத்தல் கும்பல் கைது



    கடல் வழியாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சுமார் (950 கிலோ) ஒரு டன் அளவிலான கஞ்சா வை  கடத்த முயன்ற கடத்தல் கும்பல் மதுரையில் வாகன தணிக்கையில் சிக்கியது*

    கைதி திரைப்பட பானியில் பெருமளவு கஞ்சா கடத்தப்படுவதாக மதுரை மாநகர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுரை மாநகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர சோதனையில்  போலீசார் ஈடுபட்டனர். அப்போது மதுரை கோச்சடை பகுதியில் மதுரை எஸ் எஸ் காலனி காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் வாகனத் தணிக்கை ஈடுபட்டபோது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்த முயற்சி செய்தபோது வாகனத்திலிருந்து சிலர் குதித்து தப்பி ஓடி உள்ளனர் இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை விரட்டி சென்றுள்ளனர். இதில் வாகன ஓட்டுநர் செந்தில் குமார் மதுரையை சேர்ந்த பிரபாகரன் ஆகிய பிடித்தவுடன்  வாகனத்தை சோதனை செய்த பொழுது அதில் சுமார் 950 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் 950 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன் வாகனத்தையும் பறிமுதல் செய்து என தொடர்ந்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நபர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad