சோழவந்தான் அருகே குருவித்துறையில்.கபடி போட்டியில் முதல் பரிசு பெற்ற வீரர்களுக்கு பாராட்டு விழா
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை கிராமத்தைச் சேர்ந்த வல்லவன் பார்ட்னர்ஸ் அணியினர் மதுரை ரேஸ் கோர்ஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை காண கபடி போட்டியில் விளையாடி முதல் பரிசு பெற்றனர். 36 அணியினர் கலந்து கொண்ட போட்டியில் சிறப்பாக விளையாடி முதல் பரிசினை பெற்றனர். 12 பேர் கொண்ட வெற்றி பெற்ற அணியினரை அமெச்சூர் கபடி கழக அகில இந்திய நடுவர் கருப்பட்டி செந்தில் சால்வை அணிவித்து பாராட்டினார். நடுவர் குணா, ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா நம்பிராஜன் துணைத் தலைவர் சீனிவாசன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீரர்களை பாராட்டினார்கள் மேலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி மாநில அளவிலான முதல் பரிசு பெற பயிற்சி எடுக்குமாறு அறிவுரை வழங்கினர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை