• சற்று முன்

    இந்திய பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவரும், 2020 கான மத்திய அரசின் தயான் சந்த் இடது பெற்ற ரஞ்சித் குமார் காவலர் தங்கமணி பாராட்டு


    இட்ஸ் மை லைஃப்; இட்ஸ் நொவ் ஆர் நெவெர்; இருப்பது ஒரு லைப் அடிச்சுக்க சியர்ஸ்; தேவையில்ல டியர்ஸ். -கல்லூரி மாணவிகளிடம் சினிமா பாடலை எடுத்துக்காட்டாக கூறி விழித்துணர்வளித்த போக்குவரத்துக் காவலர்

    மதுரை அவனியாபுரம் அருகே உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களை பாராட்டுவதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்திய பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவரும், 2020 கான மத்திய அரசின் தயான் சந்த் இடது பெற்ற ரஞ்சித் குமார் மற்றும் மதுரை தெப்பக்குளம் போக்குவரத்து காவலர் தங்கமணி இருவரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இப்போது நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய போக்குவரத்து காவலர் தங்கமணி மாணவர்களிடத்தில் சினிமா பாடல்களை எடுத்துக்காட்டாக கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தியது அனைவரின் கவனத்தை ஈர்த்தது.

    நிகழ்ச்சியில் மாணவர்களிடையே உரையாற்றிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி கூறுகையில்: உங்களுக்கு ஆன்லைனில் லோன் சம்பந்தமான எஸ்எம்எஸ் வரும் அதில் அந்த லோனை நீங்கள் தவிர்த்தால் உங்கள் புகைப்படங்களை எடிட் செய்து தவறாக சித்தரித்து வெளியிடுவோம் என்று மிரட்டுவார்கள். அப்படி செய்தால் பயப்படாமல் புகார் தெரிவிக்க வேண்டும். உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில் தான் உள்ளது. உங்கள் கையில் உள்ள தொலைபேசிகள் உங்களுக்கு ஆக்கபூர்வமாக தான் இருக்க வேண்டும் அதுவே பாரமாக மாறிவிடக்கூடாது. வாழ்வில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் வாழ வேண்டும் அப்படி இல்லாமல் இட்ஸ் மை லைஃப்; இட்ஸ் நொவ் ஆர் நெவெர்; என்னும் பாடலைப் போன்று சோகமாக மாறிவிடக்கூடாது. ஒரு பெண் தன் தாயிடம் மறைக்க வேண்டிய விஷயம் எதுவும் இல்லை, அப்படி ஒரு விஷயம் இருந்தால் அது தவறானது தான். வாழ்க்கை வாழ்வதற்கே; இருப்பது ஒரு லைப் அடிச்சுக்க சியர்ஸ்; தேவையில்ல டியர்ஸ் எனவே அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி கூறினார்..

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad