• சற்று முன்

    சோழவந்தான் அருகே ஊத்துக்குளி கிராமத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அறுவடை செய்த நெல்லை கொட்டி வைத்து காத்திருக்கும் விவசாயிகள்.



    மழையில் நனைந்து வீணாவதால் உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரிக்கை மதுரை மாவட்டம்.சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்துக்குளி கிராமத்தில் கண்மாய் பாசனம் மூலமும், மோட்டார் பம்ப் வைத்தும் விவசாயம் செய்த நெல்லை அறுவடை செய்து கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக களத்தில் கொட்டி வைத்து காத்திருக்கின்றனர். நெல் கொள்முதல் நிலையம் திறக்க தாமதமாவதால் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக நெல்.நனைந்து முற்றிலும் சேதமாகி வருகிறது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிப்பில் உள்ளனர். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும். ஏற்கனவே விவசாயம் செய்வது சவாலான சூழ்நிலையாக மாறிவரும் காலத்தில் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்யாமல் காத்திருக்க வைப்பதால் தங்களின் வாழ்வாதாரம் மிக மோசமான சூழ்நிலையில் உள்ளதாக இப்பகுதி விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad